22.8 C
New York
Tuesday, September 9, 2025

உளவியல் வன்முறைக்குள்ளாகும் 20 வீத குழந்தைகள்.

சுவிட்சர்லாந்தில், ஐந்து குழந்தைகளில் ஒருவர் உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர் என, குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், மூன்றில் ஒரு குழந்தை,பெற்றோருக்கு இடையே, உளவியல் ரீதியான வன்முறையின் சாட்சியாக இருக்கின்றனர் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fribourg பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கற்றல் சிரமங்கள், ஆக்ரோஷமான நடத்தை அல்லது உணர்ச்சிக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோர்கள் வேண்டுமென்றே அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்தி, குழந்தைக்குப் பொருத்தமற்ற சில நடத்தைகளை மேற்கொள்ளும்போது, உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகிறது.

குழந்தை இந்த அணுகுமுறையை தனிப்பட்ட தாக்குதலாக உணர்வதுடன்,  நிராகரிக்கப்பட்டதாகவும், மதிப்பிழந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles