-3.3 C
New York
Sunday, December 28, 2025

வீதித் தடுப்பில் மோதி சிதைந்த கார்.

Mellingen இல் உள்ள Bahnhofstrasse இல்,  பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

32 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற BMW X5 கார், வீதியோர கல் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் காரும், வீதித்தடுப்பும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

காரை ஓட்டிச் சென்ற பெண் காயங்களின்றி தப்பிய போதும் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles