Walchwil இல் உள்ள Vorderbergstrasse இல் பல மாடிகளைக் கொண்ட வீடு ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கட்டத்தின் முதல் தளம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
- Advertisement -

தீயணைப்பு பிரிவினர் சென்ற போது முதல் தளம் முற்றாக எரிந்து கொண்டிருந்தது.
மேல் தளத்தில் இருந்த இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 5 மணியளவில் 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரே தீயை மூட்டியிருக்கலாம் என, சந்தேகிக்கப்டுவதாக Zug கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம் – 20min


