Lucerne இல் Roadhouse முன்பாக பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், Roadhouse முன்பாக பலர் ஆக்ரோசமான முறையில் நடந்து கொள்வதை அவதானித்தனர்.
இதையடுத்து அந்தப் பிரச்சினையில் அவர்கள் தலையிட்ட போது, பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலில் இரண்டு பேர் பொலிசார் மீது தாக்குதல் நடத்த பின்னர் பலர் திரண்டு தாக்கினர்.
இதில் இரண்டு பொலிசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து மேலதிக பொலிசார் விரைந்து சென்று, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன் போது, 20 மற்றும் 22 வயதுடைய சுவிஸ் பிரஜைகளான இருவரும், ஸ்பானியரான 20 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம் – 20min