-0.5 C
New York
Tuesday, December 30, 2025

இன்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அமைதிக்காலம் ஆரம்பமாகிறது.

வாக்களிப்பு தினம் வரை இரண்டு நாட்கள் அமைதிக்காலம் நடைமுறையில் இருக்கும்.

இந்தக் காலப்பகுதியில் பிரசாரங்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் ஊடகங்களின் மூலம் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles