18.2 C
New York
Thursday, September 11, 2025

SVP கட்சியின் தலைவர் பதவி விலகவுள்ளார்.

SVP Aargau கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, Aargau தேசிய கவுன்சிலரான Andreas Glarner விலகவுள்ளார்.

62 வயதான அவர் டிசம்பர் 12 ஆம் திகதி SVP குழு கூட்டத்தில், மேலும் நான்கு வருட காலத்திற்கு தலைமைப் பதவியில் நீடிப்பதற்காக  போட்டியிடப் போவதில்லை என அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், Andreas Glarner இதை உறுதிப்படுத்த விரும்பவில்லை கருத்து இல்லை என்று மட்டும் அவர் கூறினார்.

உள்ளகத் தகவல்களின்படி, செல்வாக்கு மிக்க கட்சி சகாக்கள், ஒக்டோபர் இறுதியில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டிற்கு முன்பே Glarner தனது பதவியை விட்டுவிட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles