18.2 C
New York
Thursday, September 11, 2025

விலங்குகளில் பரிசோதனை நடத்த தடை கோரி 1 இலட்சம் பேர் கையெழுத்து.

ஆய்வுகூடங்களில் விலங்குகளை பரிசோதனைக்குப் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஒரு இலட்சத்திற்கும்  அதிகமானோரின் கையொப்பங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை IG Tierversuchsverbots (விலங்கு சோதனை தடை)-முன்னெடுத்துள்ளது.

இந்த அமைப்பு திங்களன்று இதற்கு ஆதரவாக  பேர்னில் 127,622 கையொப்பங்களைச் சமர்ப்பித்தது.

இதையடுத்து, மத்திய அரசும், நாடாளுமன்றமும் தமது தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்.

விலங்குகளை பரிசோதனைக்குப் பயன்படுத்துவதற்கு தடை செய்வது தொடர்பாக 2022 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

ஆய்வக விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் விலங்கு பரிசோதனைகளுக்காக விலங்குகளை வர்த்தகம் செய்வதையும் தடை செய்வதற்ப புதிய முயற்சி வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles