16.7 C
New York
Sunday, September 27, 2026

புடின் ஆட்சிக்கு எதிராக சூரிச்சில்  ஆர்ப்பாட்டம்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு 1000 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக சூரிச்சில்  நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ரஷ்யாவில் இருந்து வெளியேறியவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், ரஷ்யர்கள் போருக்கு எதிரானவர்கள், புடின் நிறுத்து என்பன போன்ற வாசகங்களுடன் கூடிய பதாதைகளையும் வைத்திருந்தனர்.

- Advertisement -

Bürkliplatz, க்கு அருகிலுள்ள நகர மண்டப மைதானத்தில் சுமார் 50 பேர் கூடி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உடனடியாக வெளியேறுவதுடன், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles