16.9 C
New York
Thursday, September 11, 2025

பேர்னில் சுடப்படவுள்ள நீர்க்காகங்கள்.

பேர்ன் கன்டோன், அடுத்த சில ஆண்டுகளில்  Thun வாவியில் 100 நீர்க்காகங்களை சுட்டுக் கொல்லத்  திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேர்னின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 20 நீர்க்காகங்கள் வரை, சுடப்படும்.

முதல் நடவடிக்கை ஜனவரி 2025 தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்ச் 31, 2025 வரை நீடிக்கும்.

அழிந்து வரும் உயிரினமாகக் கருதப்படும்  grayling மீன் இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பேர்ன் கன்டோன்  தெரிவித்துள்ளது.

இந்த வகை மீன்கள், நீர்க்காகங்களின் முக்கிய உணவாக உள்ளது.

மூலம் – watson.ch

Related Articles

Latest Articles