17.5 C
New York
Sunday, September 27, 2026

சுவிசுடனான ஒப்பந்தங்கள் – ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் பச்சைக்கொடி.

சுவிட்சர்லாந்துடனான ஒப்பந்தங்களின் தொகுப்பில் கையெழுத்திடுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் நேற்றுக்காலை பிரஸ்ஸல்ஸில் ஒப்புதல் அளித்தன.

இந்த முடிவு முறையான ஏற்றுக்கொள்ளலுக்காக, பிப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறும் பொது விவகார கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.

- Advertisement -

கவுன்சிலின் முக்கிய ஆயத்த அமைப்பானரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர பிரதிநிதிகள் குழு (COREPER), புதன்கிழமை அதன் ஒப்புதலை அளித்து, ஜூன் 2025 இல் சுவிஸ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் தொகுப்பை அடுத்த கட்டத்திற்கு அனுப்பியது.

ஒப்பந்தங்கள் 27 உறுப்பு நாடுகளாலும் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா அல்லது ரோப்பிய ஒன்றியமட்டத்தில் ஒப்புதல் போதுமானதா என்ற கேள்வி இருந்த நிலையில், இரண்டாவது விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பொருள் ஒப்பந்தங்கள் EU கவுன்சில் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles