பேர்னின் வியாழக்கிழமை கொட்டத்தொடங்கிய பனி காரணமாக, அனைத்து டிராம்களும் இன்று வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லைன் 6 இல் உள்ள டிராம்கள் மட்டுமே வொர்ப் மற்றும் பேர்ன் நிலையங்களுக்கிடையே வெள்ளிக்கிழமை மீண்டும் இயக்க முடிந்தது.
மற்ற பாதைகளில் மாலை 5 மணிக்கு மீண்டும் செயற்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட போதும், அது நடக்கவில்லை.
தண்டவாளங்களில் அதிக அளவு பனி காரணமாக, பனியை அகற்றும் செயல்பாடுகள் முடியும் வரை ட்ராம்களின் போக்குவரத்து இடைநிறுத்தப்படுவதாக பேர்ன் மொபைல் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும். காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை பேருந்து வலையமைப்பு மெதுவாக மீண்டும் தொடங்கியது.
பிற்பகலில் அனைத்து பேருந்துகளும் மீண்டும் இயக்கப்பட்டன.
அதேவேளை Lucerne நகரில் பேருந்து போக்குவரத்து நேற்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
மூலம்- watson.ch