21.6 C
New York
Wednesday, September 10, 2025

ரயில் சேவைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை.

வடக்கு சுவிட்சர்லாந்தில் மோசமான பனி நிலைமைகள் காரணமாக ரயில் சேவைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை.

சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதாக SBB நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

நாடு தழுவிய ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள் பெரும்பாலும் இன்று வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிச், பாசல் நகரங்களில் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில ரத்துச் செய்யப்பட்டு சில தாமதமாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும், SBB அறிவித்துள்ளது.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles