28.1 C
New York
Wednesday, August 12, 2026

12 மணி நேரத்துக்குள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்து.

சூரிச் கன்டோனில் 12 மணித்தியாலங்களுக்குள் 150 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வியாழன் மாலை 6 மணி தொடக்கம் வெள்ளி காலை 6 மணி வரையுமான காலப்பகுதிகளிலேயே 150இற்கும் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மோசமான பனியினால் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அதேவேளை பேர்ன் கன்டோனிலும் 130 விபத்துக்கள் பதிவாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lucerne கன்டோனில் வியாழன் பிற்பகல் 3 மணியில் இருந்து 30இற்கும் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்துக்களில் பலர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Aargauவில் 60இற்கும் மேற்பட்ட விபத்துக்களில் வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும், பலர் காயம் அடைந்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Solothurn கன்டோனிலும் பனி நிலைமையால் 40இற்கும் அதிகமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles