21.6 C
New York
Wednesday, September 10, 2025

ஒரே நாளில் சாதனையைத் தொட்ட பனிப்பொழிவு.

வியாழன் மதியத்துக்கும்,  வெள்ளிக்கிழமை காலைக்கும் இடையே, சுவிட்சர்லாந்துக்கு குறுக்கே பால்கன் பகுதிக்கு நகர்ந்த குறைந்த அழுத்த அமைப்பினால் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில வரலாறு காணாத  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக Neuchâtel மற்றும் St. Gallen இடையே உள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.

தாழ்நிலங்களில் உள்ள பல அளவீட்டு நிலையங்களில் 24 மணி நேரத்திற்குள்  பதிவாகிய அதிகபட்ச பனியின் அளவாக இருந்தது

Lucerne இல் முன்னைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

Lucerne அளவீட்டு நிலையத்தில் 24 மணி நேரத்திற்குள் 42 சென்டிமீட்டர் ப பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

1963 இல் ஒரே நாளில் 40 சென்டிமீட்டர்  பனிப்பொழிவு காணப்பட்டதே முன்னைய சாதனை அளவாகும்.

Lucerneஇன் முந்தைய நவம்பர் சாதனை 28 சென்டிமீட்டர் ஆகும்.

Zürichberg: 28 சென்டிமீட்டர்கள் (முன்பு 25 சென்டிமீட்டர்கள்)

Neuenburg: 13 சென்டிமீட்டர் (முன்பு 12 சென்டிமீட்டர்)

Glarus: 38 சென்டிமீட்டர் (முன்பு 31 சென்டிமீட்டர்)

Basel-Binningen: 27 சென்டிமீட்டர்கள் (முன்பு 14 சென்டிமீட்டர்கள்)

Langnau iE: 30 சென்டிமீட்டர்கள் (முன்பு 24 சென்டிமீட்டர்கள்)

Delsberg: 22 சென்டிமீட்டர்கள் (முன்பு 15 சென்டிமீட்டர்கள்)

Koppigen: 20 சென்டிமீட்டர் (முன்பு 14 சென்டிமீட்டர்)

Related Articles

Latest Articles