19.8 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் உறைபனியால் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை.

சூரிச்சில் உறை பனி காரணமாக பேருந்துச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சூரிச்சில் பல பகுதிகளில் உறைபனி காணப்படுவதால் இரண்டு வழித்தடங்களில் பொது பேருந்து சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வீதிகளில் பனி உறைந்திருப்பதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட தபால் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியிருப்பதாக சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.

தபால்கள் சேகரிப்பு மற்றும் விநியோகம் தடங்கலின்றி இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Basel  கன்டோனில் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இன்று காலை தொடக்கம் வழமை போல பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர்னில் படிப்படியாக ட்ராம் சேவைகள் வழமைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன.

இன்று காலையில் இருந்து ட்ராம்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. நண்பகலுக்குப் பின்னர் கணிசமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles