-0.7 C
New York
Tuesday, December 30, 2025

ஜெனிவாவில் பார்சல் குண்டு வெடித்து இளம் பெண் காயம்.

ஜெனிவாவில் petite-Boissière மாவட்டத்தில் பார்சல் குண்டு வெடிப்பில் இளம் பெண் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இளம் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியை பொலிசார் சுற்றிவளைத்து தடை செய்துள்ளனர்.

அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.

ஓகஸ்ட் 20ஆம் திகதி குப்பை பையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் பணியாற்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் குடியிருக்கும் வீட்டின் தபால் பெட்டியிலேயே நேற்று குண்டுவெடித்துள்ளது.

இதனால் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles