வங்க கடலில் உருவாகிய தாழமுக்கத்தினால் வடக்கு, கிழக்கில் கடும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தாழமுக்கம், அம்பாறைக்கு தென்கிழக்காக நிலைகொண்டுள்ளதுடன் மெவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது.
அது கிழக்கு கடலோரத்தை அண்டி வடக்கு, வடமேற்காக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றும் நாளையும் வடக்கு கிழக்கில் கடும் மழையும், சூறைக்காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனமழை பெய்யும் போது பாரிய வெள்ளஅபாயம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் நேற்று முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலையில் கடும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. காற்று பலமாக வீசுவதால், மின் விநியோகமும் பல இடங்களில் தடைப்பட்டுள்ளது.