30.3 C
New York
Thursday, June 18, 2026

தபால்காரரின் ஸ்கூட்டர் மீது மோதி கார் ஓட்டுநர் மரணம்.

தபால்காரரின் மூன்று சக்கர ஸ்கூட்டர் மீது மோதிய கார் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை Trimbach இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று சக்கர ஸ்கூட்டர்  மீதே, கார் மோதியதாகவும், அஞ்சல் ஊழியர் காயங்களுடன் தப்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதான கார் ஓட்டுநர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின்னர் மரணமானார்.

மருத்துவ காரணங்களாலேயே விபத்து ஏற்பட்டதாகவும், பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் -watson.ch

Related Articles

Latest Articles