15.8 C
New York
Thursday, September 11, 2025

பொலிசாரைத் தாக்கிய கால்பந்து ரசிகர்கள் – கலவர பூமியானதுThun.

Thun நகரில் எப்சி லுகானோ மற்றும் பெல்ஜிய அணி கேஏஏ ஜென்ட் இடையிலான, கால்பந்து போட்டியின் பின்னர்,  நேற்று மாலை பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக, பொலிசார் இறப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.

போட்டி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி நடைபெற்றதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மைதானத்தை விட்டு வெளியேறிய பெல்ஜியம் ரசிகர்கள் திடீரென பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர் என்றும், ஆயினும்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கலவரம் தொடர்பாக 45 பேரைபொலிசார் சோதனையிட்டு பின்னர் விடுவித்தனர். இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மோதல்களால் பொருள் சேதங்கள் ஏற்பட்டன.  பொலிஸ் நடவடிக்கையின் போது பர்கர்ஸ்ட்ராஸ்ஸை சுமார் ஒன்றரை மணிநேரம் மூட வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கன்டோனல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மூலம் -watson.ch

Related Articles

Latest Articles