22.9 C
New York
Friday, June 20, 2025

ரயில் போக்குவரத்தில் தடங்கல்.

Olten மற்றும் Bern இடையிலான, Bahn 2000 ரயில் பாதை நேற்றுக் காலை குறிப்பிட்டளவு நேரம் மூடப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மேல்நிலைப் பாதையில் ஏற்பட்ட கோளாறினால் இந்த சிக்கல் ஏற்பட்டதாக, SBB தெரிவித்துள்ளது.

எட்டு மணிக்கு மேல், ரயில் போக்குவரத்திற்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

இருப்பினும், தாமதங்கள் மற்றும் ரத்து என்பனவற்றினால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

ICE, EC, IC, IC1, IC6, IC8, IC61, IC81, IR15, IR16 மற்றும் S23 உட்பட பல லைன்களில் ரயில்கள் தாமதமாகச் சென்றன.

லாங்கெந்தால் வழியாக செல்லும் பாதையின் திறன் அனைத்து ரயில்களுக்கும் போதுமானதாக இல்லாததால், IR16 Olten இலிருந்து xx:56 மற்றும் Bern இலிருந்து xx:33 S23 Olten இலிருந்து xx:16 மற்றும் Langenthal இலிருந்து xx:21 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles