20.8 C
New York
Sunday, June 21, 2026

பன்றிக்கு வைத்த குறி – வேட்டைக்காரர் படுகாயம்.

Vaud கன்டோனில் காட்டுப் பன்றி வேட்டைக்குச் சென்ற ஒருவர் மற்றொரு வேட்டைக்காரரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Oulens-sous-Echallens என்ற இடத்தில் வேட்டைக்காரர்கள், நாய்களுடன் சென்று காட்டுப் பன்றிகளை கலைத்து துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடச் சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

காட்டுப் பன்றிக்  கூட்டம் ஒன்றை இலக்கு வைத்து வேட்டைக்கார்களில் ஒருவர் சுட்ட போது 64 வயதுடைய மற்றொரு வேட்டைக்காரரின் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

அவர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

அந்த இடத்தில் 7 வேட்டைக்காரர்கள் காணப்பட்ட நிலையில், 67 மற்றும் 80 வயதுடைய இரண்டு பேரிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles