Constance ஏரியில் விபத்துக்குள்ளாகிய படகில் இருந்த இரண்டு பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுவிசில் நடக்கும் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜெர்மனியின் Friedrichshafen இல் இருந்து புறப்பட்டு வந்தவர்களே விபத்தில் சிக்கினர்.
அவர்கள் நேற்று பயண முடிவிடத்தை அடையாத நிலையில் ஜேர்மன் பொலிசார் தேடுதல்களை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சுவிசின் Landschlacht பகுதியில் கவிழ்ந்த நிலையில் படகு காணப்படுவதாக Thurgau பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில், Münsterlingen இற்கு அப்பாலுள்ள நீர்ப்பரப்பில் இருந்து 38 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஜெர்மனியர்களின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, Constance இல் இவர்கள் பங்கேற்க வந்த Regatta der Eisernen” படகோட்ட நிகழ்வு, ஏற்பாட்டாளர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
மூலம்- bluewin