20.8 C
New York
Sunday, June 21, 2026

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொலிஸ் மீது தாக்குதல்.

Schützenmatte பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரர்களை தேடிச் சென்ற பெர்ன் கன்டோனல் பொலிசார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

போதைப் பொருள் கடத்தல்காரர்களின்  மறைவிடத்திற்குச் சென்ற பொலிசார் சந்தேக நபர் ஒருவரை தடுத்து விசாரித்த போது, அவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிக்க முயன்றார்.

இதையடுத்து, பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி,  அவரை கைது செய்தனர்.

அதையடுத்து முக மூடி அணிந்து கொண்டு வெளியே வந்த குழுவினர், போத்தல்களால் பொலிசாரை தாக்கத் தொடங்கினர்.

இதில் பொலிசாரின் இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்தன.

இதையடுத்து பொலிசார் பெப்பர் ஸ்பிரே, மற்றும் இறப்பர் குண்டுகளை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles