19.2 C
New York
Sunday, June 21, 2026

சிறையில் இருந்து இளம்பெண் தப்பியோட்டம்.

Hindelbank  சீர்திருத்தச்  சிறைச்சாலையில் இருந்து 21 வயதுடைய இளம் பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவுக்கும், சனிக்கிழமை அதிகாலைக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vaud கன்டோனைச் சேர்ந்த அந்த பெண் கைதியை கைது செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என பெர்ன் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரால் பொது மக்களுக்கு ஆபத்து இல்லை என்றும், அவர் தப்பிச் சென்றது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் கூறியுள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles