Egerkingen இல் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுக்காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

ரயில் மோதி படுகாயம் அடைந்த அந்த நபர் சற்று நேரத்தில் மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் வெளியாரின் எந்த தலையீடுகளும் இல்லை என்றும், இது ஒரு விபத்து என்றும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.


