-10.3 C
New York
Monday, December 23, 2024

குடியேற்றக் கோரிக்கைகள் – சுவிஸ் அதிகாரிகள் வட, கிழக்கில் ஆய்வு.

சுவிட்சர்லாந்தின் நீதி மற்றும் பெடரல் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் செயற்படும் குடிபெயர்வுக்கான அரச செயலகத்தின் அதிகாரிகளான  மெய்ன்ரட் லிண்ட், ஆண்ட்ரியாஸ் ஷ்மிட் மற்றும் ஜீனைன் மைர் ஆகியோர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள், சுவிட்சர்லாந்து தூதரகத்தின் டோரிஸ் மேனர் மற்றும் சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன், வடக்கு, கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு பயணம் செய்து,  சிவில் தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில்,  சிவில்  சமூகத்தினர்,   வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன்போது,  சுவிட்சர்லாந்துக்கு கிடைக்கும் குடியேற்றக் கோரிக்கைகளில் 40சதவீதமானவை இலங்கையிலிருந்து கிடைக்கின்றன என்றும், அவற்றில் 20 முதல் 30சதவீதமானவை வடக்கு இளையோரிடமிருந்தே வருவதாகவும் சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக காணப்படும் நிச்சயமற்ற நிலை ,  தொழில்வாய்ப்பு,  உயர்கல்வி உள்ளிட்ட விடயங்கள் காரணமாகவும் அவ்விதமான நிலைமைகள் ஏற்படுவதாக சிவில் சமூகத் தரப்பினர் குறிப்பிட்டதுடன்,  பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும் இளையோருக்கான அச்சமான வாழ்க்கைக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுவிஸ் குழுவினர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,   தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோரையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

Related Articles

Latest Articles