17.2 C
New York
Wednesday, September 10, 2025

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது சந்திராயன்-3 வரலாறு படைத்தது இந்தியா!

நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா  புதன்கிழமை பெற்றது என்று அந்த நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 “இந்தியா நிலவில் உள்ளது” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ். சோமநாத் கூறினார். சந்திரயான்-3, லேண்டர் சந்திர மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இது புதிய இந்தியாவின் வெற்றி முழக்கம்” என்று கூறினார்.

Related Articles

Latest Articles