22.8 C
New York
Tuesday, September 9, 2025

மன்னாரில் துப்பாக்கி சூடு – இருவர் உயிரிழப்பு

மன்னார் – அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை  காலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.

வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த இருவரையும் இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சலவக்கை மற்றும் நொச்சிக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

 தடயவியல் பொலிஸாரினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles