15.3 C
New York
Sunday, October 4, 2026

ரசிகர்களின் மோதலை தடுத்த பொலிஸ்.

சூரிச்சில் FCZ  மற்றும் GC கழகங்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இரண்டு கழகங்களின் ரசிகர்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து அனுமதி பெறப்படாத பேரணிகளை ஆரம்பித்தனர்.

- Advertisement -

இந்தப் பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் அவர்கள் ஆபத்தான பட்டாசுகள், கத்திகள் போன்றவற்றையும்  வைத்திருந்தனர்.

இரண்டு ரசிகர் கூட்டங்களும் மோதிக் கொள்வதை தடுக்க சூரிச் பொலிசார் இருவேறு இடங்களில் தடுத்துநிறுத்தி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், கத்திகள், ஆபத்தான பட்டாசுகள் போன்ற பல தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles