சூரிச்சில் FCZ மற்றும் GC கழகங்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இரண்டு கழகங்களின் ரசிகர்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து அனுமதி பெறப்படாத பேரணிகளை ஆரம்பித்தனர்.
இந்தப் பேரணிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் அவர்கள் ஆபத்தான பட்டாசுகள், கத்திகள் போன்றவற்றையும் வைத்திருந்தனர்.
இரண்டு ரசிகர் கூட்டங்களும் மோதிக் கொள்வதை தடுக்க சூரிச் பொலிசார் இருவேறு இடங்களில் தடுத்துநிறுத்தி சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், கத்திகள், ஆபத்தான பட்டாசுகள் போன்ற பல தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min