2 C
New York
Monday, December 29, 2025

பார்சல் திருட்டுகள் 3 மடங்காக அதிகரிப்பு.

கடந்த நான்கு ஆண்டுகளில் பார்சல் திருட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இத்தகைய திருட்டுக்கள் உச்சத்தில் உள்ளன.

Winterthur நகர  பொலிசார் அண்மையில்  பல குற்றவாளிகளைக் கைது செய்ததுடன்,  திருடப்பட்ட பொதிகளையும் கைப்பற்றினர்.

அழகுசாதனப் பொருட்கள்,  18 மது போத்தல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகியவை கைப்பற்றப்பட்ட பொருட்களில்  அடங்கும்.

இவற்றில் சிலவற்றின் பெறுநர்களை  பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles