8.3 C
New York
Sunday, March 29, 2026

ஐரோப்பாவில் சிறந்த ரயில் சேவைகளில் SBB இரண்டாவது இடம்.

ஐரோப்பாவில் மிகச் சிறந்த சேவையை வழங்கும் ரயில் நிறுவனங்களின் தரவரிசையில் SBB இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

NGO Transport & Environment என்ற நிறுவனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது.

27 நிறுவனங்களை உள்ளடக்கி, பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் இத்தாலியின், Trenitalia நிறுவம் உள்ளது. அதற்கு மொத்தமுள்ள 10 புள்ளிகளில் 7.7 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.

இரண்டாமிடத்தில்  7.4 புள்ளிகளைப் பெற்று, SBB யும், செக் குடியரசின் RegioJet நிறுவனமும் உள்ளன.

ஒஸ்ரியாவின் ÖBB  நான்காமிடத்தையும், SNCF  ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன.

கடைசி 27 ஆவது இடத்தில், Eurostar ரயில் சேவையும், அதற்கு ஒரு இடம் முன்னதாக கிறீசின்  Hellenic நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles