20.5 C
New York
Wednesday, May 13, 2026

ஏடிஎம் இயந்திரம் வெடி வைத்து தகர்ப்பு.

Fribourg  கன்டோனில் உள்ள Rossens  இல் அடையாளம் தெரியாத நபர்களால் ஏடிஎம் இயந்திரம் வெடி வைத்து உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரோந்து சென்ற பொலிசார் ஏடிஎம். இயந்திரம் வெடித்துச் சிதறிக் கிடப்பதையும், அந்த இடத்தில் இருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்றில் சிலர் தப்பிச் செல்வதையும் அவதானித்துள்ளனர்.

அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல்களை நடத்தியும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Bern, Fribourg மற்றும் Vaud கன்டோனல் பொலிசார் இணைந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அதேவேளை, சற்று நேரத்திற்குப் பின்னர் Vaud கன்டோனில் உள்ள Montagny-près-Yverdon இல் ஏடிஎம் ஒன்றை உடைத்து கொள்ளையடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles