தொழிலதிபர் மைக்கேல் நோபல் சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராடுகிறார்.
அவர், Dintikon AG இல் அண்மையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை திறந்து, குறைந்த விலையில் எரிபொருள் விற்பனையை மேற்கொண்டு வருகிறார்.
மைக்கேல் நோபல் குறைந்த விலையில் எரிபொருளை விற்கும் பெட்ரோல் நிலையங்களை Füllinsdorf BL, Thayngen SH, Pfäffikon SZ, Winterthur மற்றும் Gossau SG ஆகிய இடங்களில் நிறுவிய பின்னர், தற்போது Dintikon AG இல் தனது Etzelpark பெட்ரோல் நிலையத்தின் கிளையை திறந்துள்ளார்.
இங்கு ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோல், 1.59 பிராங்கிற்கு வழங்கப்படுகிறது.
அதேவேளை சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் 1.72 பிராங்கிற்கு விற்கப்பட்டு வருகிறது.
மூலம் -bluewin

