Schaffhausen கன்டோனில் இன்று காலை மின்தடை ஏற்பட்டது.
Neuhausen, Beringen மற்றும் Guntmadingen நகராட்சிகள் மின் தடையினால் பாதிக்கப்பட்டன.
பரவலான மின் தடை ஏற்பட்டதாக அலர்ட் ஸ்விஸ் எச்சரிக்கை செயலி மூலம் அறிவிக்கப்பட்டது.
தொலைபேசி மற்றும் தரவு சேவைகளில் இடையூறுகள் இருக்கலாம் என்றும், லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும் பின்னர் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. மீளவும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ள போதும் மின் தடைக்கான காரணம் வெளியாகவில்லை.
மூலம் – Bluewin