-5.7 C
New York
Sunday, December 28, 2025

சுவிசில் உள்ள சிரியர்கள் மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்தில் உள்ள சிரிய  புலம்பெயர் சமூகத்தினர், அசாத் ஆட்சியின் வீழ்ச்சியை  மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

நேற்று பிற்பகல் பெர்னில் உள்ள ரயில் நிலைய சதுக்கத்தில் தன்னிச்சையான பேரணி ஒன்றையும் அவர்கள் நடத்தினர்.

அதில் பங்கேற்றவர்கள், அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாக குறிப்பிட்டனர்.

பெடரல் புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 28,000 சிரியப் பிரஜைகள் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றனர்.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles