22.1 C
New York
Saturday, June 27, 2026

இன்று அதிகாலையில் பேர்னில் ஏடிஎம் குண்டு வைத்து தகர்ப்பு.

பேர்ன் கன்டோவில் உள்ள Hilterfingen நகரசபையில், Hünibach   பகுதியில் இன்று அதிகாலையில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று குண்டுவைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை பெர்ன் கன்டோனல் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, பொலிஸ் விசாரணைகள்  காரணமாக,இன்று  காலை துன் ஏரியின் வலது கரையில் போக்குவரத்து தடைப்பட்டது.

மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

அடையாளம் தெரியாத நபர்கள் ஏற்கனவே Rossens FR இல் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்திருந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் Montagny-près-Yverdon VD இல் உள்ள ஏடிஎம்மிலும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles