Lucerne நகரில் காரை நிறுத்தும் எவரும் பணம் செலுத்தும் போது மோசடி செய்பவர்களின் வலையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
பணம் செலுத்துவதற்கான போலி QR குறியீடுகள் திங்களன்று பல நிறுத்துமிட மீட்டர்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக Lucerne பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

இந்த மோசடி குறித்து வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு Lucerne பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கட்டணக் குறியீட்டை ஸ்கான் செய்ய Twint அல்லது Park ஆப்ஸ் ஐ எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
குறியீடு போலியாக இருந்தால், ஒரு பிழை செய்தி தோன்றும்.
மோசடி செய்பவர்கள் ஸ்கான் செய்ய ஆப்ஸைப் பயன்படுத்தாமல் கமராவைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- www.watson


