குழந்தை இயேசுவை ஏந்திய அன்னை மரியாளின் படத்தின் மீது துப்பாக்கியால் சுட்டு, சர்ச்சைக்குள்ளான இளம் பெண் அரசியல்வாதியான சனிஜா அமேதி மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்குப் பின்னர், சில மாதங்களாக அவர் சூரிச் நகர சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
32 வயதான அவர் நேற்று சூரிச் நகர சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் பொதுவாக நிர்வாக உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் பின் நுழைவு வழியாக கட்டடத்திற்குள் நுழைந்தார்.
நேற்றைய அமர்வின் போது அவர் உரையாற்றியிருந்தார்.
மூலம்- 20min