Vaud கன்டோனில் உள்ள, Forel (Lavaux) இல், தபால் பேருந்து மோதி 10 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

Servion இலிருந்து வந்த ஒரு தபால் பேருந்து, வளைவில் திரும்பிய போது, 10 வயது சிறுவன் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமானார்.
விபத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
மூலம்- 20min


