16.3 C
New York
Friday, September 12, 2025

குளத்தில் விழுந்த சிறுவன் -ஆபத்தான நிலையில்.

சூரிச்சில்  உள்ள Eglisau  இல் ஐந்து வயது குழந்தை ஒன்று குளத்தில் விழுந்து,  ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவன் மழலையர் பள்ளியிலிருந்து மாலை 3:30 மணியளவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் காணியினுள் வேலி அமைக்கப்பட்ட குளத்திற்குச் சென்ற சிறுவன் நீரில் விழுந்துள்ளார்.

சிறுவன் அங்கு சென்றதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

பக்கத்து வீட்டுக்காரர் சிறுவனைப் பார்த்து, குளத்திலிருந்து மீட்டு, அவசர சேவைக்கு அழைத்தார்.

ஐந்து வயது குழந்தை ரேகா மீட்பு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles