23.5 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் ரொட்வீலர் நாய்களை வாங்க தடை.

சூரிச் குடியிருப்பாளர்கள் 2025 ஜனவரி 1,ஆம் திகதி முதல்   புதிதாக ரொட்வீலர் ரக நாய்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இனத்தை சேர்ந்த நாய்கள் கடித்து குழந்தைகள் காயம் அடைந்த இரண்டு சம்பவங்கள் கன்டோனில் நடந்ததை அடுத்து அரசு கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவிற்கு பயிற்சியாளர்கள் மற்றும் ரொட்வீலர் நாய்களை வளர்ப்பவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

சுவிஸ் ரொட்வீலர் கிளப்பின் தலைவரான வோல்டர் ஹார்ன், தனது இரண்டு ரொட்வீலர்களுடன் வசிப்பதால், தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படலாம், ஆனால் தடைக்கு எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மூலம்-20min.

Related Articles

Latest Articles