23.5 C
New York
Thursday, September 11, 2025

வீட்டை விட்டு காணாமல் போனவர் சடலமாக மீட்பு.

St. Erhard இல் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9ஆம் திகதி காணாமல் போன 65 வயதுடைய,  Lucerne குடியிருப்பாளர் St. Erhard உள்ள தனது வீட்டை விட்டுச் சென்ற நிலையில்,  காணாமல் போனார்.

அவரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டார்.

அவர் இறந்து கிடந்ததாக Lucerne  பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மூன்றாம் தரப்பு ஈடுபாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles