Köniz இல் புதன்கிழமை மாலை இ-பைக் விபத்தில் காயமடைந்தவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Köniz இல் உள்ள Könizstrasse இல், இ-பைக் சென்று கொண்டிருந்த போது, குறித்த நபர் தானாகவே விபத்துக்குள்ளானார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 58 வயதான சீன பிரஜை ஆவார்.
பெர்ன் கன்டோனல் பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மூலம்- polizeinews