Neuhausen am Rheinfall இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதிகாலை 1:30 மணியளவில், Neuhausen am Rheinfall இல் உள்ள Zelgstrasse இல் அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக Schaffhausen பொலிசார் தெரிவித்தனர்.
அங்கு அனுப்பி வைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
Neuhausen / Oberklettgau (NOK) தீயணைப்புப் பிரிவினரால் தீ விரைவாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெளியேற்றப்பட்ட மக்கள் சிறிது நேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு தொடர்ந்து விசாரணை இடம்பெறுகிறது.