16.9 C
New York
Thursday, September 11, 2025

ரயில் மோதி ஒருவர் படுகாயம்.

பேர்னில் உள்ள Interlaken  இல் உள்ள ரயில்வே கடவை அருகே ஒருவர் ரயிலில் மோதி பலத்த காயமடைந்தார்.

நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

​​ரயில்வே  கடவை மூடப்பட்டிருந்த போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ​​இன்டர்லேக்கன் வெஸ்ட் ஸ்டேஷனில் இருந்து இன்டர்லேக்கன் ஈஸ்ட் ஸ்டேஷனை நோக்கி வந்த ரயில் அவர் மீது மோதியது.

ரயிலை அவசரமாக நிறுத்தப்பட்டும், மோதலை தடுக்க முடியவில்லை. பலத்த காயமடைந்த நபர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால், இன்டர்லேகன் வெஸ்ட் மற்றும் இன்டர்லேக்கன் ஈஸ்ட் இடையே ரயில் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டது.

Related Articles

Latest Articles