30.5 C
New York
Wednesday, August 19, 2026

கிளிநொச்சியில் டிப்பர் மோதி குழந்தை பலி- தாய், தந்தை, சிறுவன் படுகாயம்.

கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேற்று இரவு 7 மணியளவில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது

விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததாக  மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுக் குழந்தை படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த மற்றக் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles