Ostermundigen இல் உள்ள Rothus ரவுண்டானாவில் இடம்பெற்ற கார் விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
நேற்று இரவு 9:35 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவரது பயணி பலத்த காயமடைந்தார்.
- Advertisement -

விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
போல்லில் இருந்து வான்க்டார்ஃப் நோக்கிப் பயணித்த ஒரு கார், ரோத்தஸ் ரவுண்டானாவில் வீதியை விட்டு விலகி, இன்னும் தெளிவுபடுத்தப்படாத காரணங்களுக்காக, மின்கம்பத்தில் மோதியது.
காயமடைந்த இருவரும் அம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- polizeinews


