சூரிச்சில் உள்ள Kaufleuten கிளப் முன்பாக, ஏற்பட்ட மோதலில் ஒருவர்படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது என பொலிசார் தெரிவித்தனர்.
தலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட அந்த நபர், ஆரம்ப மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையின் படி, அவர் நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்-20min.

