ரயில் பாதை அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, Furka கார் போக்குவரத்தின் செயல்பாடுகள் நேற்றுக் காலை Oberwald VS மற்றும் Realp UR இடையே நிறுத்தப்பட்டன.
Visp VS – Andermatt UR லைனில் பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனால் R 43 பாதையில் உள்ள ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று Matterhorn Gotthard ரயில்வே X தளத்தில் அறிவித்தது.
மாற்று பயணிகள் போக்குவரத்துக்கு சாத்தியமில்லை இதனால் பயணிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
அதேவேளை, வாகன ஓட்டிகள் Valais மற்றும் மத்திய சுவிட்சர்லாந்திற்கான பயணங்களுக்கு முன்னதாக, மாற்று வழிகளை சரிபார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin

